நாளை மின்நிறுத்தம்
நாளை மின்நிறுத்தம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடக்கிறது. எனவே இந்த மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்காலனி, புதிய பஸ் நிலையம் பகுதிகள், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், கரூப்ஸ் நகர் நூற்பாலை, மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப்பெருமாள்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்தார்.
திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமாநேரி, கச்சமங்கலம், இளங்காடு, மாரனேரி, சுக்காம்பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுககுடி, வரகூர், கண்டமங்கலம், விஷ்ணம்பேட்டை, கூத்தூர், மகாராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, நடுக்காவேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.