நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x

நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நாகை வடக்கு உபகோட்ட இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நாகை, அக்கரைப்பேட்டை, மஞ்சக்கொல்லை தெற்கு மற்றும் வடக்குபொய்கைநல்லூர், சிக்கல், தோணித்துறை ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.இதேபோல வேளாங்கண்ணி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வேளாங்கண்ணி நகர், செருதூர், பரவை ஆகிய பகுதிகளுக்கும், வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம் ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story