மின் நிறுத்தம்
குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் பகுதிகளில் மின் நிறுத்தம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story