நாளை மின் நிறுத்தம்
திருப்பத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பத்துர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்துர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாபட்டு, மடவாளம், மாடப்பள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், கந்திலி, மொளகரம்பட்டி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனுர், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதுர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை திருப்பத்துர் மின் வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.