நாளை மின் நிறுத்தம்
நாளை மின் நிறுத்தம்
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மனி்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் ஏ.எஸ்.அன்பழகன் நகர், எஸ்.ஏ.ஆனந்தம் நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியத்தெரு, ஜெகநாதன் நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன் நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்ரஹாரம் கடைத்தெரு, பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் கரந்தை மின் வழித்தடத்தில் உள்ள கங்காநகர், புண்ணியமூர்த்தி தோட்டம், அழகப்பா ரைஸ்மில், சிரேஷ்சந்திரம் ரோடு, வடக்கு வாசல், சத்தியா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கல்லுக்கட்டித்தெரு, கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.