நாளை மின் நிறுத்தம்
பட்டுக்கோட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பட்டுக்கோட்டை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை நகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-பட்டுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பட்டுக்கோட்டை பெரியதெரு.வ.உ.சி. நகர், வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகர், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், மயில் பாளையம், தங்கவேல் நகர், பெரிய கடை தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, ஆர்.வி. நகர், தலையாரி தெரு, பள்ளி கொண்டான், அணைக்காடு, பொன்னவராயன் கோட்டை, முதல் சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதுல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பழஞ்சூர், காசாங்காடு, கள்ளிக்காடு, ராசியங்காடு, மன்னாங்காடு, மழவேனிற்காடு, வெண்டாக்கோட்டை மின் பாதைகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.