நாளை மின்நிறுத்தம்
திருக்காட்டுப்பள்ளி துணைமின் நிலையத்தில் நாளை மின்நிறுத்தம்
திருக்காட்டுப்பள்ளி துணைமின் நிலையத்திற்கு இருமுனை இணைப்பு பெறுவதற்கு பூதலூர் ரெயில் பாதை குறுக்கே 110 கி.வோ உயரழுத்த மின்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, கச்சமங்கலம் மாறநேரி, இளங்காடு, செய்யமங்கலம்,பாதிரக்குடி, கல்லணை, கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, சுக்காம்பார் பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, வானராங்குடி, பொதகிரி, கூத்தூர், மகாராஜபுரம், வடுககுடி, சாத்தனூர், மன்னார்சமுத்திரம், மைக்கேல்பட்டி, கண்டமங்கலம், வரகூர், கருப்பூர், மணத்திடல்,அம்பதுமேல்நகரம், கடம்பன்குடி, நடுக்காவேரி ஆகிய பகுதிகளுக்கு நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு மின்பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.