ஆலங்குடி, மழையூர், வடகாடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


ஆலங்குடி, மழையூர், வடகாடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:58 AM IST (Updated: 27 Dec 2022 4:09 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி, மழையூர், வடகாடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி மற்றும் மழையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி, அரசடிப்பட்டி, மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்கலம், மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டயன்பட்டி, துவார், ஆத்தங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஆலங்குடி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், சூரன்விடுதி, கீழாத்தூர், பள்ளத்திவிடுதி, அரையப்பட்டி, பசுவயல் மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று வடகாடு உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.


Next Story