அன்னவாசல், கீரனூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அன்னவாசல், கீரனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின் நிறுத்தம்
இலுப்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்னவாசல், அண்ணாபண்ணை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
கீரனூரில்...
குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதியிலான பரந்தாமன் நகர், கீழகாந்தி நகர், மேல காந்தி நகர், 4 ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.