கடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நெல்லிக்குப்பம்,
நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர் செம்மண்டலம், சாவடி, உச்சிமேடு, நாணமேடு, பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், நத்தப்பட்டு, குமாரபுரம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், கலையூர், இராண்டாயிர வளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம், நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவல் நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் நல்லாத்தூர் துணை மின்நிலையத்திலும் பராமரிப்பணி பணிகள் நடைபெற உள்ளதால் நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசபாளையம்இ குட்டியாங்குப்பம், சிங்கிரிகுடி, புதுபூஞ்சோலைகுப்பம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.