எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டிகாலனி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சலம்நகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசுகாலனி, ஸ்டேட்பேங்க்காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜீவ்காந்திநகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை கே.கே.நகர், இந்தியன்பேங்க்காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோகாலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ்ரோடு, செம்பட்டுபகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story