ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

ஜெயங்கொண்டம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- ஜெயங்கொண்டம் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சார வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், மேலூர், வடவீக்கம், விழப்பள்ளம், குமிளங்குழி, உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோவில், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், சூரியமணல், துளாரங்குறிச்சி, இளமங்கலம், சிலால், வானதிரையான்பட்டினம், அங்கராயநல்லூர், தேவமங்கலம், பிலிச்சிகுழி, ஒக்கநத்தம் மற்றும் துணைமின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story