கரூர் ஒத்தக்கடை, தாளப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


கரூர் ஒத்தக்கடை, தாளப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூர் ஒத்தக்கடை, தாளப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர்

மின் நிறுத்தம்

ஒத்தக்கடை துணைமின் நிலையத்திற்குட்பட்ட சோமூர் பீடர், புலியூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட தொழிற்சாலை பீடர் ஆகிய பீடர்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேடிச்சிபாளையம், சோமூர், இடையார்பாளையம், கல்லுப்பாளையம், எழுத்துப்பாறை, திருமுக்கூடலூர், அச்சமாபுரம், ரெங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம், மரவாபாளையம், காட்டுக்களம்.நெரூர் அக்ரஹாரம், புலியூர் கணேசபுரம், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், வடக்குபாளையம், புரவிபாளையம், ஆயுதப்படை, புலியூர் ஏ.பி. ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தாளப்பட்டி

இதேபோல் தாளப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் ஜவுளிப்பூங்கா, ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி.ஆட்டையாம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story