கரூர் கோட்ட பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கரூர் கோட்ட பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெகதீசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கரூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான, ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், காரவழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், இராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், காருடையாம்பாளையம், க.பரம்பத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.