கே.கே.நகர், வேங்கைமண்டலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


கே.கே.நகர், வேங்கைமண்டலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

கே.கே.நகர், வேங்கைமண்டலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை கே.சாத்தனூர், கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், இச்சிகாமலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோகாலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருச்சி கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 காரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களான புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story