மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிக்காடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story