நாகையில் நாளை மின்தடை


நாகையில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 10 Aug 2023 12:45 AM IST (Updated: 10 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நாளை மின்தடை

நாகப்பட்டினம்

நாகை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் நடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பருவ கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வெளிப்பாளையம் மின் பாதையில் மின்வினியோகம் பெறும் அக்கரைகுளம், மருந்துகொத்தள தெரு, திருவாரூர் மெயின் ரோடு, சட்டைநாதர் மேலவீதி ஆகிய பகுதிகளுக்கும், மருங்கூர் மின் பாதையில் மின்வினியோகம் பெறும் மருங்கூர், சியாத்தமங்கை, புறாகிராமம் ஆகிய பகுதிகளுக்கும், வாழ்மங்களம் மின்பாதையில் மின்வினியோகம் பெறும் அகரகொந்தகை, கள்ளிக்காடு, போலகம், படுதார்கொல்லை, மேலபனங் காட்டூர், கொத்தமங்கலம், வாழ்மங்களம் ஆகிய பகுதிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story