நாகை, திருமருகல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


நாகை, திருமருகல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

நாகை, திருமருகல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை வடக்கு இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நீலாவீதி, கடற்கரை சாலை, பெருமாள் கோவில் வீதி, தோணித்துறை, மஞ்சக்கொல்லை, சிக்கல், பரவை ஆகிய பகுதிகளுக்கும், நரிமணம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், வெங்கிடங்கால், கொட்டாரக்குடி, சோழங்கநல்லூர், வைப்பூர், நெய்குப்பை, மேலபூதனூர், கீழபூதனூர், சூரனூர் ஆகிய பகுதிகளுக்கும், திருமருகல் துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் மருங்கூர், சேசமூலை, சீயாத்தமங்கை, ஏர்வாடி, கோட்டப்பாடி, கட்டுமாவடி ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story