பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பட்டுக்கோட்டை நகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகர், தாலுகா ஆபீஸ், வீட்டு வசதி வாரியம், மயில் பாளையம், தங்கவேல் நகர், பெரிய கடை தெரு, தேரடி தெரு, அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டி தெரு, ஆஸ்பத்திரி ரோடு, ஆர்.வி. நகர், தலையாரி தெரு, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, பள்ளிகொண்டான் மற்றும் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பழஞ்சூர், காசாங்காடு, கள்ளிக்காடு, ராசியங்காடு, மன்னங்காடு, மழவேனிற்காடு வெண்டாக்கோட்டை மின் பாதைகளில் நாளை(சனிக்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஒரத்தநாடு நகர், புதூர், பாச்சூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருக்காடிப்பட்டி, கக்கரை, எலந்தவெட்டி, பாளம்புத்தூர், தெலுங்கன்குடிக்காடு, புலவன்காடு, வளத்தான் தெரு, பேய்க்கரும்பன்கோட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.


Next Story