தில்லைநகர், வரகநேரி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
தில்லைநகர், வரகநேரி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி:
பராமரிப்பு பணிகள்
திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தில்லைநகர், கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள் காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழையகுட்ஷெட் ரோடு, மேலப்புலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, கும்பங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதி, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிளோதர் தெரு, சப்-ஜெயில் ரோடு, பாரதி நகர், இதாயத் நகர், காயிதேமில்லத் சாலை, சின்னசெட்டி தெரு, பரியகம்மாளத் தெரு, சின்னகம்மாளத் தெரு, பெரியசெட்டி தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், கூனிபஜார் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மின் நிறுத்தம்
இதேபோல் வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடிபஜார், பாரதி நகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னை நகர், மல்லிகைபுரம், கீழ்புதூர், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லூக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிநகர், வள்ளுவர் நகர், அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, அன்புநகர், பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லிம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தம்புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.