திருத்தங்கலில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக திருத்தங்கலில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி கோட்டத்தில் உள்ள திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழதிருத்தங்கல், அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி, ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி ஆகிய பகுதியில் நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.
Related Tags :
Next Story