கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் இன்று(சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கோவில்பட்டி பகுதி
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எம். துரைசாமிபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளுக்கும். பசுவந்தனை உபமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் நாகம்பட்டி, சில்லாங்குளம் ஆகிய பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல எட்டையாபுரம் உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ராமனூத்து, சிந்தலக்கரை, குமரெட்டியாபுரம், ஆர். வெங்கடேஸ்வர புரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் பகுதி
இதேபோன்று திருச்செந்தூர் மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் மின்கோட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது.
எனவே, ராமசாமிபுரம், சங்கிவிளை, குமாரசுவாமிபுரம், சுப்ரமணியபுரம், வடக்கு குமாரசுவாமிபுரம், அம்மாள்புரம், வெள்ளாளன்விளை, சுதந்திர நகர், லெட்சுமிபுரம், பூந்தோட்டம், வடக்கு காயல்பட்டண உப்பள பகுதிகள், குரும்பூர் பஜார், முஸ்ஸிலீம் தெரு, அருளானந்தபுரம், வடக்கு பொத்தக்காலன்விளை, நரையன்குடியிருப்பு, மதகநேரி, பனைகுளம், வைத்தியலிங்கபுரம், சமத்துவபுரம், தேரிப்பனை, பிள்ளைமடையூர், ஏழுவரைமுக்கி, வடலிவிளை, தோப்பூர் (மெஞ்ஞானபுரம்), கொட்டங்காடு, ஞானியார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, வெங்கட்ராமானுஜபுரம், மெய்யூர், கடாட்சபுரம், அன்பின்நகரம், பிறைகுடியிருப்பு, பெரியதாழை, பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.