கோவில்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


கோவில்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

கோவில்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மின்கம்பங்களை மாற்றும் பணி

இதுகுறித்து கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ஸகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

கோவில்பட்டியில் மின்தடை

எனவே, கோவில்பட்டி சிட்கோ உப மின் நிலையத்தின், ஸ்டாலின் காலனி, எட்டையபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு முத்து மாரியம்மன் கோவில் வரை, மந்தித்தோப்பு ரோடு (பாம்பே ஸ்வீட்ஸ் வரை), வக்கீல் தெரு ஆகிய பகுதிகளுக்கும், சன்னது புதுக்குடி, உபமின் நிலையத்தின் மூலம் மின்வினியோகம் பெறும் தெற்கு இலங்தை குளம், வடக்கு இலந்தைகுளம் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உபமின் நிலையத்தின் மூலம் மின்வினியோகம் பெறும் மங்கலம், மேல மங்கலம், குப்பனாபுரம் ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

படர்ந்தபுளி

இதேபோல விஜயபுரி உப மின் நிலையத்தின் மூலம் மினிவினியோகம் பெறும் செமப்புதூர், கசவன்குன்று, ஈராடச்சி, கருங்காலி பட்டி, சிதம்பராபுரம், விஜயாபுரி, கொடுக்காம் பாறை ஆகிய பகுதிகளுக்கும், எட்டயபுரம் உப மின் நிலையத்தின் மூலம் மினிவினியோகம் பெறும் ராமனூத்து, படர்ந்தபுளி ஆகிய பகுதிகளுக்கும், விளாத்திகுளம் உபமின் நிலையத்தின் மூலம் மினிவினியோகம் பெறும் சங்கரலிங்கபுரம், கழுகாசலபுரம் ஆகிய பகுதிகளுக்கும். எம். துரைசாமிபுரம் உபமின்நிலையத்தின் மூலம் மினிவினியோகம் பெறும் கோபாலபுரம், காலாங்கரை பட்டி, சங்கரலிங்கபுரம், கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கும், கழுகுமலை உபமின் நிலையத்தின் மூலம் மின்வினியோகம் பெறும் வள்ளிநாயகபுரம், வேலாயுதபுரம், கூழைத்தேவன் பட்டி ஆகிய பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story