மணிகண்டம், சிறுகனூர், அளுந்தூர், வயலூர் பகுதிகளில் இன்று மின்தடை


மணிகண்டம், சிறுகனூர், அளுந்தூர், வயலூர் பகுதிகளில் இன்று மின்தடை
x

மணிகண்டம், சிறுகனூர், அளுந்தூர், வயலூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி, ஜூன்.14-

மணிகண்டம், சிறுகனூர், அளுந்தூர் துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே மணிகண்டம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

இதுபோல் சிறுகனூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர். பாளையம், சனமங்களம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கூத்தனூர் ஸ்ரீதேவி மங்களம், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.மேலும் அளுந்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமாநகர், சூராவளிபட்டி, குஜிலியம்பட்டி, யாகப்புடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரகுடிபட்டி, இ.மேட்டுபட்டி, மேலபச்சகுடி, அரசுகல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி., பள்ளபட்டி ஆகிய பகுதிகளில் இன்று 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் முத்துராமன் (திருச்சி கிழக்கு), சிவக்குமார் (ஸ்ரீரங்கம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுபோல் திருச்சி அதவத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வயலூர் பீடரில் உயர்அழுத்த மின்பாதையில் தவிர்க்க முடியாத அவசர கால பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே வயலூர் பீடரில் மின் வினியோகம் செய்யப்படும் அதவத்தூர், வயலூர், கொத்தட்டை, குழுமணி, கீழ வயலூர், மேலவயலூர், பேரூர், மேலப்பட்டி, கோப்பு, அயிலாப்பேட்டை, சின்னகருப்பூர், பெரியகருப்பூர், சுப்பையாபுரம், முல்லிகரும்பூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.


Next Story