இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x
தினத்தந்தி 13 Jun 2022 1:59 AM IST (Updated: 13 Jun 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மதுரை

மதுரை,

பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்று மின்சாரம் நிறுத்தம்

சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வலையபட்டி பீடர் மற்றும் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தெத்தூர் பீடரில் இன்று(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே ராசக்காபட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வளையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி மற்றும் குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, தாடகை நாச்சிபுரம், பெரியார் நினைவு சமத்துவபுரம், அங்கப்பன் கொட்டம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பெரியார் பஸ் நிலையம்

மதுரை எல்லீஸ்நகர் மற்றும் அனுப்பானடி துணைமின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. பெரியார் பஸ்நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, ரெயில்நிலையம் சந்திப்பு பகுதி,, டவுன் ரோடு, மேலமாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, காகா தோப்பு, தாய்நகர், மாருதி நகர், கங்கா நகர், சோணையா நகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்து முழுவதும், கண்மாய்கரை மற்றும் ராஜமான் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்,

இந்த தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

விக்கிரமங்கலம்

சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே விக்கிரமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலபெருமாள்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரச மரத்துபட்டி, பையத்தான், நரியம்பட்டி, பாண்டியன் நகர், கல் புளிச்சான்பட்டி, கொளத்துப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, வடுகபட்டி,, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story