இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஆனந்தூர்
ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஆய்ங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 2 வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) நிஷாக்ராஜா தெரிவித்துள்ளார்.
மின்கம்பங்கள் மாற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீர் மழை, பலத்த காற்று போன்ற இயற்கை இடர்பாடுகளால் மின் வினியோகம் பாதிக்கப்படாமல் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உயர் மின்அழுத்த மின் பாதையில் ஏற்கனவே கண்டறியப்பட்ட சேதமடைந்த மற்றும் பழுதான 120 மின் கம்பங்களை புதிதாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) மின் கம்பங்களை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக மின் கம்பம் மாற்றும் இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும் என்று ராமநாதபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஸ்ரீராம் தெரிவித்து உள்ளார். மேலும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் சேதமடைந்து பழுதான உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் இந்த மின்பாதை வழியாக மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமான சாமி கோவில்தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
லாந்தை
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள உயர் மின் பாதையில் பராமரிப்பு பணி மற்றும் சேதமடைந்து பழுதான உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் மாற்றும் பணி நாளை நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கூரிச்சாத்த அய்யனார் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், பெரியார் நகர், சர்ச் ரோடு, மதுரை ரோடு, எட்டிவயல், லாந்தை, அச்சுந்தன்வயல், சித்தூர், பயோனியர் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், சிங்காரதோப்பு பகுதி, செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.