இன்று, நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


இன்று, நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x

இன்று, நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

மதுரை

-

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையம் உயரழுத்த மின் பாதையில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், சி.ஏ.எஸ். நகர், சொக்கு பிள்ளை நகர் முழுவதும், அண்ணாநகர்,அக்ரஹாரம், புரசரடி, ெஜ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம். நகர், எஸ்.கே.ஆர். நகர், முல்லை நகர், ராஜீவ் காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரத வீதி, குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அதேபோல அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நியூ ஜெயில் ரோடு, கரிமேடு, முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில்காலனி, மேலப்பொன்னகரம் 8, 10, 11, 12-வது தெருக்கள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் சோழவந்தான் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது.

எனவே சமயநல்லூர், ஊர்மெச்சிகுளம், வளர்நகர், பாத்திமா நகர், தேனூர் ரோடு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story