பராமரிப்பு பணி: இன்று, நாளை மின்தடை


பராமரிப்பு பணி: இன்று, நாளை மின்தடை
x

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

மதுரை


மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அருள்தாஸ்புரம், பாக்கியநாதபுரம், கே.டி.கே. தங்கமணி நகர், அசோக்நகர், களத்துபொட்டல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story