வத்தலக்குண்டு பகுதியில் சூறைக்காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள்
வத்தலக்குண்டு பகுதியில் சூறைக்காற்றில் மின்கம்பகங்கள் சாய்ந்தன.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியில் சூறைக்காற்றுக்கு மின்கம்பம் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. அதேபோல் வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் ராஜாநகர் அருகே மற்றொரு மின்கம்பம் ஒடிந்து விழுந்தது. மேலும் வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தில் இருந்த ஒரு மரம் சாய்ந்து, அலுவலக கட்டிடத்தின் மீது விழுந்தது.
வத்தலக்குண்டு அருகே மல்லனம்பட்டியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மேற்கூரை சூறைக்காற்றில் பறந்து, அருகில் நின்றிருந்த லாரி மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வத்தலக்குண்டு பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story