முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
மயிலாடுதுறை அருகே செருதியூரில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே செருதியூர் கிராமத்தில் வடக்கு தெருவில் உள்ள 4 மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும். மின்சார வாரியத்தினரிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மின்சார வாரியத்தினர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story