சாலையின் நடுவே மின்கம்பங்கள்
நீடாமங்கலத்தில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையின் நடுவே மின்கம்பங்கள்
நீடாமங்கலம் நகரில் காமராஜர் காலனி, காமராஜர் நகர் உள்ளது. இந்த பகுதிகளில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் குடியிருப்புகள் அதிகம் இல்லாத காலத்தில் மின்வாரியம் சாலையின் நடுவே மின்கம்பங்களை தங்கள் வசதிக்கு அமைத்துள்ளனர்.
தற்போது குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் மண்சாலைகள் மேம்படுத்தப்பட்டு தார்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் கார், மோட்டார் சைக்கிளில், இந்த சாலையில் சென்று வருகின்றன.
வாகன ஓட்டிகள் அவதி
மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவரச கால வாகனங்ளும் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் நடுவே மின்கம்பங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த சாலை வழியாக செல்லும் வாக ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் அதன் மீது மோதினால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அகற்ற வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் கொத்தமங்கலம், பாப்பையன்தோப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.