திருப்பத்தூரில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்


திருப்பத்தூரில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
x

திருப்பத்தூரில் மின்சிக்க விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தின் சார்பில் மின்சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடுதல் தலைமை பொறியாளர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் கோட்ட செயற் பொறியாளர் அருண்பான்டியன் முன்னிலை வகித்தார். கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்துகொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், சேலம் ரோடு வழியாக சென்று கிருஷ்ணகிரி ரோடு காந்தி சிலை அருகில் முடிவடைந்தது. உதவி செயற் பொறியாளர்கள் பிரபு, சந்தானம், கண்ணன், சுப்பிரமணி, உதவி பொறியாளர்கள் சுதாகர், முஸ்தபா, சோமு உள்பட 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய பாணியாளர்கள், அலுவலர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story