மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம்
மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அரியலூரில் மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது தேரடி மங்காய் பிள்ளையார் கோவில் தெரு, வெள்ளாளத்தெரு, சத்திரம், திருச்சி சாலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒற்றுமை திடலில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக நட்சத்திர குறியீடு கொண்ட மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டும். சூடாக உள்ள உணவுப் பொருட்களை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இந்த ஊர்வலத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மின்சார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.