மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
தஞ்சாவூர்;
பராமரிப்பு பணிக்காக தஞ்சைஅருகே மின்சாரம் நிறுத்தம்செய்யப்படும் இடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் நிறுத்தம்
தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், பைபாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி, நெல்லித்தோப்பு, கடகடப்பை, தளவாய்பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழவஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குமின் வினியோகம் இருக்காது.
பூண்டி- ராகவாம்பாள்புரம்
தஞ்சையை அடுத்த பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்.சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.மேலும் பொதுமக்கள் மின்தடை தொடர்பாக 9498794987 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.