அரக்கோணம் பகுதியில் நாளை மின்வினியோகம் நிறுத்தம்
அரக்கோணம் பகுதியில் நாளை மின்வினியோகம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் பகுதியில் நாளை மின்வினியோகம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினநியோகம் இருக்காது.
இதேபோல் இச்சிபுத்தூர் மற்றும் சாலை துணை மின் நிலையங்களில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அதன் காரணமாக இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் சாலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான் பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என செயற்பொறியாளர் ஏ.எல்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.==========