மின்சாரம் நிறுத்தம்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி களான ஆர்.எஸ்.மங்கலம் டவுண், செட்டியமடை, சூரமடை, பெரியார்நகர், பெருமாள்மடை, தலைகாண் பச்சேரி, நோக்கங்கோட்டை, சிலுகவயல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் மற்றும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரி செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மற்றும் 4-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருவாடனை மின் வாரிய துறை உதவி செயற் பொறியாளர் நிஷாக்ராஜா தெரிவித்துள்ளார்.
கமுதி வீரசோழன் மின் பாதையில், மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உடப்பன் குளம், சின்ன உடப்பங்குளம், பெரிய உடப்பங்குளம், வலைய பூக்குளம், மண்டல மாணிக்கம், எழுவனூர், காக்குடி, போத்த நதி, பெருமாள் தேவன் பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை இருக்காது கமுதி மின்சார வாரிய உதவி செயல் பொறியாளர் விஜயன் தெரிவித்தார்.