நாமக்கல்லில், 23-ந் தேதி திலேபியா மீன்கள் வளர்ப்பு பயிற்சி


நாமக்கல்லில், 23-ந் தேதி  திலேபியா மீன்கள் வளர்ப்பு பயிற்சி
x

நாமக்கல்லில், 23-ந் தேதி திலேபியா மீன்கள் வளர்ப்பு பயிற்சி

நாமக்கல்

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 23-ந் தேதி காலை 10 மணிக்கு பண்ணை குட்டையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட திலேபியா மீன்கள் வளர்ப்பு என்கிற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் மீன் பண்ணை குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணை குட்டை அமைத்தல், மீன்குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள் மற்றும் மானியங்கள் குறித்து கற்று தரப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஆர்வம் உள்ள நபர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், பயிற்சி வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.


Next Story