போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி


போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
x

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம்

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கவியரசு வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் மணி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பணிக்கு தற்போது அரசின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வில் 15 பேர் தேர்வாகி உடல்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். குறிப்பாக போட்டி தேர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஒருவர் காவல் துறையில் சேர்ந்து அஸ்தம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனவே, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story