2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வுக்கு பயிற்சி
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வுக்கு பயிற்சி நடந்தது.
திருநெல்வேலி
தமிழ்நாடு காவல்துறையின் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விரைவில் நடக்க உள்ள உடல்தகுதி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற கடுமையாக பயிற்சி பெற்று வருகிறார்கள்.
அதன்படி நெல்லையில் காவலர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு விரைவில் நடக்க உள்ளது.
Related Tags :
Next Story