டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பயிற்சி


டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பயிற்சி
x

நல்லூர் பகுதியில் டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பயிற்சி நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நீர் வள, நிலவள திட்டத்தின் கீழ் திருந்திய நெல் சாகுபடியில் டிரோன் மூலம் நானோ யூரியா உரம் தெளித்தல் பற்றிய செயல்விளக்க பயிற்சி நல்லூர் ஒன்றியத்தில் உள்ள இளங்கியனூர் மற்றும் மேமாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் தவப்பிரகாஷ் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் உழவியல் துறை இணை பேராசிரியர் பாஸ்கரன் கலந்து கொண்டு திருந்திய நெல் சாகுபடி பற்றிய தொழில்நுட்பம் மற்றும் நெற்பயிரில் நானோ யூரியாவின் பயன்பாடு மற்றும் முக்கியதுவம் குறித்து விளக்கினார். மேலும் டிரோன் மூலம் எவ்வாறு நானோ யூரியா உரம் தெளிக்க வேண்டும் என்பது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் முன்னோடி விவசாயி சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு நெல் சாகுபடி பணிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் கவிபிரியா, கலைசெல்வம், மணிகண்டராஜா, மகாதேவன், நவின்குமார், ஜீவானந்தம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story