திரிபுர நாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை


திரிபுர நாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
x

தென்மலை திரிபுர நாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே தென்மலையில் அமைந்துள்ள திரிபுர நாதேஸ்வரர் சிவ பரிபூரணி அம்மன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில் நந்தீஸ்வரர், சிவன் மற்றும் அனைத்து சாமிகளுக்கும் பால், தயிர், மஞ்சள், நெய், குங்குமம், விபூதி, இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு உளுந்து, விபூதி, குங்குமம் மற்றும் பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் பட்டர் கணேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story