ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ வழிபாடு


ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுவாமி மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோன்று பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் வைகாசி விசாகம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள சிவன், முருகன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

நந்திகேஸ்வரருக்கு பல்வேறு பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது


Next Story