சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு


சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிரதோஷத்தையொட்டி நேற்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து அவர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காசி விஸ்வநாதர்

வெம்பக்கோட்டையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ஏழாயிரம்பண்ணையில் உள்ள ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டி சங்கரலிங்கசாமி, சிமெண்டு ஆலை காலனியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் கோவில், எதிர்கோட்டையில் உள்ள சுனை கண்ட லிங்கேஸ்வரர் கோவில், கண்மாய் பட்டியில் உள்ள குபேர லிங்கேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள் புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அதேபோல பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் பிரதோஷ மூர்த்தி வீதியுலா நடைபெற்றது. சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story