கோவில்களில் பிரதோஷம்


கோவில்களில் பிரதோஷம்
x
தினத்தந்தி 7 Oct 2022 7:45 PM GMT (Updated: 7 Oct 2022 7:45 PM GMT)

திண்டுக்கல், வடமதுரை, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தையொட்டி பூஜைகள் நடைபெற்றது.

திண்டுக்கல்

பிரதோஷ பூஜை


திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத சுக்கிர பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


இதேேபால் பழனி முருகன் கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் சாமிக்கு பால், பழம், பன்னீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கோதமங்கலம் பெரியாவுடையார் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நந்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.


பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பழனி சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 11 பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதன்பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் நந்தீஸ்வரர் முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.


நத்தம் கோவில்பட்டி


நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.


பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், வில்வ இலை, தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பட்டிவீரன்பட்டி


பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரரும், நந்தியும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


அய்யம்பாளையம் அருள்முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில், காந்திபுரம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது.



Next Story