சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு


சதுரகிரியில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

பின்னர் அதிகாலை 5 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர். பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

மருத்துவ வசதி

பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 12 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதைகளில் 2 இடங்களில் மருத்துவ குழுவினரால் மருத்துவ வசதியும், 5 இடங்களில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதியும், மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆடி அமாவாசை திருவிழா

இ்ந்த கோவிலில் நாளை ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story