கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 2 Jun 2023 1:00 AM IST (Updated: 2 Jun 2023 12:22 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதருக்கு நெய், பால், தேன், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கரபுரநாதர், நந்தி தேவர் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் உத்தம சோழபுரத்தை சுற்றியுள்ள பூலாவரி, பெரியபுத்தூர், நெய்க்காரப்பட்டி, வீரபாண்டி, அரியானூர், வேம்படிதாளம், கொண்டலாம்பட்டி, தம்ம நாயக்கன்பட்டி, கொழிஞ்சிபட்டி, வேடுகாத்தான்பட்டி, சிவதாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்து கரபுரநாதரை தரிசித்து வழிபட்டனர். நிறைவாக கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story