தர்மபுரியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


தர்மபுரியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

தர்மபுரியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோட்டை மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி-நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் சாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனுறை ஆனந்த நடராஜர் கோவில், நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவானேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story