சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கியில் கோட்டை பகுதியில் விசாலாட்சி உடனுறை விசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நந்திபகவானுக்கு மஞ்சள், பால், தேன், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையாக வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் கோவில், திருமலைராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கோவில், பாளையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், விஜய் ரகுநாதபுரம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கீரனூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதேபோல் அம்மா சத்திரம், குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story