சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் கமலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து புதிதாக செய்யப்பட்ட உற்சவர்கள், புதிய ரிஷப வாகனத்தில் உள் மண்டப பிரகாரத்தில் வலம் வந்தனர். இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலும் சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதைெயாட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர், பழச்சாறுகள் என பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்திபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து சுயம்வரீஸ்வரர் வண்ணமலர் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.