சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 5 Jan 2023 12:10 AM IST (Updated: 5 Jan 2023 12:20 PM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர், ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பஞ்சவர்னேஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அரியலூர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் குறிஞ்சான் குளக்கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர், ரெயில்வே கேட் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில், செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story